திருஞானசம்பந்த
சுவாமிகள்
அருளிச்செய்த
திருப்பாம்புரம்
தேவாரத் திருப்பதிகம்
Thiru Gnansambathrin Pathigam
Thiupaamppuram
Thevaram
திருசிற்றம்பலம்
Dr.ப .சண்முகசுந்தரம் அவர்கள் திரு நடராசுந்தரம் அவர்களின் கனவை நினைவக்கிய திருமதி இராமதிலகம் அவர்களுக்கும் விழாகுழுவினர்க்கும் நன்றி நவில்கிறார். |
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர்
திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர்
மான்மறி ஏந்திய
மைந்தர்,
கார் அணி திகழ் மிடறு உடை அண்ணல்
கண்நுதல் விண்ணவர் ஏத்தும் பார்
அணி திகழ்தரு நால்மறையாளர்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
விண்ணவர் போற்றும், நான் மறையில்
வல்லவர்கள் திகழும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலங்களையும் முப்பரிநூலையும் அழகிய
மார்பில் அணிந்தவர். திரிபுரங்களை
எரித்தவர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தியவர். இளமானைக் கரத்தில் ஏந்திய மைந்தராவார். கொடிய நஞ்சினையுண்டதால் நீலமணிபோல் திகழும் கழுத்தினைக் கொண்ட மணிகண்டர். வெண்மை நிறம் பொருந்திய
நிலவினைத் தலையிலே
ஏந்தி சந்திர சேகராக
விளங்குபவர் அந்தணனாகி ஆண்டு
கொண்டவர் சிவன் என்பதால் நான்மறையாளற் என்றார். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை
அருளியவர். நெற்றிக்கண்ணர்.
Transliteration
Cīr aṇi tikaḻ tirumārpil veṇnūlar,
Ttiripuram ericeyta celvar,
vār aṇi vaṉamulai maṅkai ōr
paṅkar,
māṉmaṟi ēntiya maintar,
kār aṇi maṇi tikaḻ miṭaṟu uṭai
aṇṇal,
kaṇnutal, viṇṇavar ēttum
pār aṇi tikaḻtaru Nālmaṟaiyāḷar
Pāmpura Nalnakarārē
Translation
The Lord who is residing in
the Paampuranagar is praised by the celestial beings is wearing a white sacred
thread adorned with other beautiful ornaments on his chest. He is the God who has
burnt the three cities (Threepuram). He has unified Umaiaal in his left side of
the body who is very beautiful. He has
taken black poison to save guard the living beings which is shining like
sapphire in his neck. He has a frontal eye. He is mentioned here as “Naal
Marryalar” because he once came as a aged Brahmin who knows all the four Vedas
and united with him his devotee “Nambiyarurar (Sundarar)”on his marriage day at Puttur and took him to
“Thiruvannainallur”.
1
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம்
கொன்றையோடு எருக்கு அணிசடையர்,
அக்கினொடு ஆமை பூண்டு அழகாக
அனல் அது ஆடும் எம் அடிகள்
மிக்கநல் வேத வேள்வியுள் எங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம் பல்பூதம் பாடிட வருவார்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு, வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணியும் சடையை உடையவர், சங்கு மணிகளோடு ஆமை
ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும்
தலைவர். மிக்க பயன்களை தரும் நல்ல வேதவேள்விகளில் தேவர்கள்
மணம் மிக்க மலர்களைத் தூவிப் போற்றவும் இருபுறமும்
அடியவர்கள் பாடித் துதிக்கவும் தமக்குரிய அவியினை பெறுவதற்கு வருபவர்.
Transliteration
Kokku iṟakōṭu kūviḷam mattam
koṉṟaiyōṭu
erukku aṇicaṭaiyar,
akkiṉoṭu āmai pūṇṭu aḻakāka
aṉal atu āṭum em aṭikaḷ,
mikkanal vēta vēḷviyuḷ eṅkum
viṇṇavar viraimalar tūvap
pakkam palpūtam pāṭiṭa
varuvār
Pāmpura Nalnakarārē
Translation
The Lord who is residing at Pampuram
wears on his locks of hair dress (Chadai) cranes feather, Vilvam, Oomathapmpoo,
Kondrai flower, Vellerukkam flower. He is garlanding himself with aged shells and
shell of a Tortoise and he is dancing in a stage in the midst of arch of flames
which is glowing in all directions. He
comes accompanied with his disciples singing songs on his either side to get
his share from specially performed Vaelvi Poojas and the Celestials scatter
fragrant flowers everywhere in places where good sacrifices ordained in Vedas
are performed.
2
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர்
சூறை நல் அரவு
அது சுற்றிப்,
பின்னுவார் சடைகள் தாழ விட்டு ஆடிப்,
பித்தராய்த் திரியும் எம்பெருமான்
மன்னும் மாமலர்கள் தூவிட நாளும்,
மாமலையாட்டியும் தாமும்
பன்னும் நால்மறைகள் பாடிட வருவார்,
பாம்புர நல்நகராரே.
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
திருப்பாம்புர நன்னகர் இறைவர் புலித்தோல் தைத்த ஆடையை
அணிந்து அதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றிக் கொண்டு
பின்னிய நீண்ட சடைகளைத் தாழ தொங்கவிட்டுக்
கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் பெருமான். அவர் மணம்
நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன் மகளாகிய பார்வதியும்,
தாமுமாய்ப் புகழ்ந்து போற்றும் நான் மறைகளை
அடியவர் பாடிக்கொண்டு வர, அடியவர்க்கு காட்சி தருபவர்.
Transliteration
tuṉṉaliṉ āṭai uṭuttu ataṉmēl ōr
cūṟai
nal aravu atu cuṟṟip
piṉṉu vār caṭaikaḷ tāḻa viṭṭu āṭip
pittarāyt tiriyum emperumaṉ,
maṉṉum māmalarkaḷ tūviṭa nāḷum,
Māmalaiyāṭṭiyum tāmum
paṉṉum nālmaṟaikaḷ pāṭiṭa
varuvār
Pampura Nalnakarārē
Translation
Lord Siva wearing a tiger’s skin as
loin cloth in his waist and encircling upon tightly
a cobra which is breathing like a storm,
wanders like a insane person dancing, letting down the long and matted hair hanging low,
comes himself accompanied with the
daughter of the mountain, who were
always praising the four Vedas which were sung by the devotees who worship them by scattering flowers.
The
snake swirling around his waist is “kundalini”,
the Shakti or divine force thought to reside
within everything. 3
துஞ்சும் நாள்துறந்து தோற்றமும் இல்லாச்
சுடர் விடு சோதி எம்பெருமான்
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர்
நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மாமயில் ஆட,
மாட மாளிகை தன்மேல் ஏறிப்
பஞ்சுசேர்
மெல் அடிப் பாவையர் பயிலும்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
தோற்றமும் இறப்பும் இல்லாத வராய் ஒளி
பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான்,
விடம் பொருந்திய கண்டத்தை உடையவர். மேகத்தை அளாவிய சோலைகளில்
மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி,
செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய
பெண்கள் உலாவும் திருப்பாம்புர நன்னகரை உறைவிடமாகக் கொண்டு விளங்குபவர் நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார். விடம்
பொருந்திய கண்டத்தை உடையவர்.
Transliteration
Tuñcum nāḷtuṟantu, tōṟṟamum
illāc,
cuṭar viṭu cōti, emperumāṉ,
nañcu cēr kaṇṭam uṭaiya eṉ
nātar,
naḷ iruḷ naṭam ceyum nampar,
mañcu tōy cōlai māmayil āṭa,
māṭa māḷikai taṉmēl eṟip,
pañcucēr mel aṭip pāvaiyar
payilum
Pampura Nalnakarārē
Pampura Nalnakarārē
Translation
Our Lord is residing at a good
city Pampuram has black
poison in his neck. He has no birth and death he is seen as a light that blazing every where. He is dancing at midnight when
the beautiful peacocks dance in the gardens
to which the clouds approach and
where beautiful ladies dyed their soft
painted feet prepared from red
cotton, practice dance ascending up the mansions which have storey. 4
நதி அதன் அயலே நகுதலை மாலை
நாள்மதி சடை மிசை அணிந்து
கதி அதுவாகக் காளி முன் காணக்
கான் இடை நடம் செய்த கருத்தர்
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர்
ஒத்து ஒலிப் ஓவாப்
பதி அது ஆகப் பாவையும் தாமும்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
இறைவன் கங்கையைச் சடையில் சூடி அவளருகே சிரிக்கும் தலைமாலை,
பிறை மதி ஆகியவற்றை அணிந்து நடனத்திற்குரிய முறை அதுவே என்னும்படி, காளி முன்னே இருந்து காண இடுகாட்டுள் நடனம்
செய்ததலைவர் ஆவார். உமையம்மையும் தாமுமாக நெறிமுறை வழாது வேதியர்கள்,
வேள்விகள் செய்தலால்,
எழும் வேத ஒலி நீங்காத திருத்தலம் பாம்புரம் என கருதி அங்கே
கோயிலில் குடிகொண்டுள்ளார்.
Transliteration
Nati ataṉ ayalē nakutalai
mālai,
nāḷmati, caṭai micai aṇintu,
nāḷmati, caṭai micai aṇintu,
kati atuvākak kāḷi muṉ kāṇak
kāṉ iṭai naṭam ceyta karuttar,
viti atu vaḻuvā vētiyar vēḷvi
ceytavar ottu oli ōvāp
pati atu ākap, pāvaiyum
tāmum,
Pampura Nalnakarārē
Translation
The
Lord who has given place for the river Gaga Devi on his head and having adorned on the matted
hair dress (caṭai) the crescent moon and a garland of laughing skull, danced in
the cremation-ground to be witnessed by Kaḷi,
being the swift movement of dance. He and the beautiful lady Umai are dwelling in a good city of Pampuram a place where the sound of the vetams
recited by Brahmins regularly who performed sacrifices and who do not err from
prescribed conduct.
5
5
ஓதி நான்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்,
ஒளி திகழ் உருவம்சேர் ஒருவர்
மதினை இடமா வைத்த எம் வள்ளல்
மான்மறி ஏந்திய மைந்தர்
“ஆதி நீ அருள் !” என்று
அமரர்கள் பணிய
அலைகடல் கடைய அன்று எழுந்து
பாதி வெண்பிறை சடை வைத்த எம்பரமர்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
திருப்பாம்புர நன்னகர் இறைவர், கல்வி கற்றுத்
பொருள் தெரிந்து வேதம் ஓதி அவற்றின் வயிலாகத்
தம்மைப் பற்றி உணரும் அடியவர்கள் உணர்வில் தங்கியிருக்கும் ஒப்பற்றவர். ஒளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை
இடப்பாகமாகக் கொண்ட எம் வள்ளலாவார். இளமை பொருந்திய மான் ஏந்திய கரத்தை உடைய அழகர் திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த
ஆலகாலவிடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதிப்பரம் பொருள் நீயே என்று அடிபணிந்து எம்மைக் காத்தருள் என வேண்ட,
நஞ்சினை உண்டும், கடலினின்றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும்
அருள்புரிந்த எம் மேலான தலைவர் அடியவர்க்கு அருள எழுந்தருளி
உள்ளார்.
Transliteration
ōti nāṉku uṇarvārkku uṇarvu uṭai
oruvar
oḷitikaḻ uruvamcēr oruvar
mātiṉai iṭamā vaitta em vaḷḷal,
mātiṉai iṭamā vaitta em vaḷḷal,
māṉmaṟi ēntiya maintar,
"āti, nī aruḷ!" eṉṟu
amararkaḷ paṇiya
alaikaṭal kaṭaiya aṉṟu eḻunta
pāti veṇpiṟai caṭai vaitta
emparamar
Pampura Nalnakarārē
Translation
The Lord stays within the senses of
the learned unequalled persons who studied and understood the religious works
and the Vedas and is able to explain the meaning of the spiritual wisdom. The
peerless God has a brilliant jubilant body; the God has unbounded liberality
placed a lady on the left side of his body; the God who is holding a young deer
in his hand; when the poisonous milk
like (poisoned nectar) rose from the roaming oceans, the immortals bowed before
him saying, “You are the origin of all things! Grant us your grace” and the
Lord has churned the roaming oceans poisonous milk and placed the white
crescent moon on his head dress of eight phases which is also rose from the
roaming oceans is none other than the superior Lord who resides in a good city
of Pampuram .
6
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுகம் ஒழித்து
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி
அனல் அது ஆடும் எம் அடிகள்
கால்னைக் காய்ந்து தம் சுழல் அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
திருப்பாம்புர நன்னகர் இறைவர்
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் ஐந்து
தலைகளை பெற்ற போது ஐந்தலைகளில் ஒன்றைக் கொய்தவர். ஆலமரத்தின்
கீழிருந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் உபதேசித்து அறம் அருளியவர். தீயிடை நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக்
காய்ந்தவர். தம் நெற்றி
கண்ணால் காமனைப் பொடிபட
நோக்கியவர். உபமன்யுக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்ததவர் ஆவார்.
Transliteration
māliṉukku aṉṟu cakkaram
īnttu,
malaravaṟku orumukam oḻittu,
āliṉ kīḻ aṟam ōr nālvarukku
aruḷi,
aṉal atu āṭum em aṭikaḷ
kālaṉaik kāynttu tam cuḻal aṭiyāl,
kāmaṉaip poṭipaṭa nōkkip,
pālaṉukku aruḷkaḷ ceyta em aṭikaḷ
Pampura Nalnakarārē
Translation
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
Lord
who is dancing in the midst of aureole of flames has given an instrument
Chakkrayutham (Boomarang) to Thirumal; removed one head of the Brahma when he
had five heads and reduced it to four; having given religious instruction for
four sages under the Banyan tree; fixing his frontal eye’s gaze on Kaman to
reduce him to ashes; having destroyed the god of death with his foot wearing
Kazhal and graced the boy Markandaeyan is none other than Lord who resides at
Paampuram.
7
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க,
மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்
அனல் அது ஆடும் எம் அண்ணல்
மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட
வந்து கிழி அரிசிலின் கரைமேல் படப்பையில்
கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய
திருவடிவிரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப்போற்ற
சாம கானம் பாட வைத்தவர்; இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து
இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக்கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து
கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர்.
Transliteration
Vidaiththa val arakkan vetpinai edukka,
melliya thiruviral
oon'ri
adarththu, avan thanakku an'ru aru'l cheytha adika'l,
anal athu
aadum em a'n'nal,
madakkodi avarka'l varupunal aada,
vanthu
kizhi arisilin karaimeal,
padappaiyil ko'narnthu paruma'ni chitha'rum
Pampura
Nalnakarārē
Translation
Ravanan the strong Demon (arakkan) who burst into a rage lifted
the Kayilai Mountain, our Lord with his soft and sacred toe pressed and crushed him and when Ravana understood his mistake and
pleaded, the God granted his gracefulness towards
him and Ravana sung the “Sama Kaanam” in praise of the Lord . Our Lord always dances in the areole of
flames resides in the good city Pampuram where the river Arcil brings large pearls which are
scattered in the gardens flowing for the
young ladies to bathe lives in good city called Pampuram and he graces his disciples.
As the Lord of Dance, Nataraja performs the Thandavam, the dance in which the
Universe is created, maintained, and dissolved. Shiva's long, matted tresses,
usually piled up in a knot, loosen during the dance and crash into the heavenly
bodies. The surrounding flames represent the manifest Universe.
8
கடிபடு கமலத்து அயனொடு மாலும்
காதலோடு அடிமுடி தேடச்,
செடிபடு வினைகள் தீர்த்து அருள் செய்யும்
தீவணர், எம் உடைச் செல்வர்,
முடிஉடை அமரர், முனி கணத்தவர்கள்
முறைமுறை அடிபணிந்து ஏத்தப்,
படி அதுவாகப் பாவையும் தாமும்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப்
பணிந்து ஏத்துதற்கு உரியதகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த்
திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல்
விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத்தீவண்ணராய்க் கிளைத்த வினைகள்
பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.
Transliteration
Kadipadu kamalaththu ayanodu maalum,
kaathaloadu
adimudi theadach,
chedipadu vinaika'l theerththu aru'l cheyyum,
theeva'nar,
em udaich chelvar,
mudiudai amarar, muni ka'naththavarka'l,
mu'raimu'rai
adipa'ninththu eaththap,
padi athuvaakap paavaiyum thaamum
Pampura
Nalnakarārē
Ayaṉ (Brahman) who is seated in the
fragrant lotus and Mal were searching with zeal the feet and head of the Lord
failed to find them but our God whose body has the colour of the flames of fire
granted his gracefulness towards them. His grace removed the sins that were
crowded like a wild bush around them. He is a Lord who is praised by the
immortals who wear crowns and the groups of sages, in the proper order is living
himself and the beautiful lady in the good city of Pampuram .
9
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும்
குற்று விட்டு உடுக்கையர் தாமும்
கண்டவாறு உரைத்துக் கால்நிமிர்த்து உண்ணும்
கையர்தாம் உள்ளவாறு அறியார்,
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நல்நகராரே.
தெளிவுரை
திருப்பாம்புர
நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச்சிறிய ஆடையை
அணிந்து,
கண்டபடி பேசிக் கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும்
உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய
பார்வதிதேவி நடுங்க யானை யின் தோலை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம்
செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.
Transliteration
Kuṇṭar, cākkiyarum, kuṇam,
ilātārum,
kuṟṟu
viṭṭu uṭukkaiyar tāmum,
kaṇṭavāṟu uraittuk,
kālnimirttu uṇṇum
kaiyartām uḷḷavāṟu aṟiyār,
vaṇṭucēr kuḻali malaimakaḷ naṭuṅka
vāraṇam uriceytu pōrttār,
paṇṭunām ceyta pāvaṅkaḷ
tīrppār
Pampura Nalnakarārē
The other religious people can’t
understand the truth of our Lord Sivan covered himself with flaying of the
elephant, by this act the daughter of the mountain whose tresses of hair, bees
reach frightened; and he is the Lord who
will destroy the sins committed by us in
our previous births is residing in the good city of Pampuram .
10
Note: (The names of other religions and the behavior and
characteristic of the disciples are
purposely not mentioned here)
பார்மலிந்து ஓங்கிப் பருமதில் சுழ்ந்த
பாம்புர நல் நகராரைக்
கார்மலிந்து அழகுஆர் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி,
நார்மலிந்து ஓங்கும் நால்மறைஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகுஆர்
செல்வம் அதுஓங்கிச்
சிவன் அடி நண்ணுவர் தாமே
தெளிவுரை
உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப்
பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும்
வயல்கள் சூழப்பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான,
கழுமலம் (சீர்காழியில் ) என்னும் பழம் பதியில் கவுணியர்
கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும்
நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்,
சிறப்பும் செல்வமும் புகழும்
அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து மறுமையில் சிவனடியை அடைவர்.
Transliteration
Pārmalintu ōṅkip parumatil cuḻnta
Pāmpura nal
Nakarāraik
kārmalintu aḻakuār kaḻaṉicūḻ māṭak
kaḻumala
mutupatik kavuṇi,
nārmalintu ōṅkum nālmaṟaiñāṉa
campantaṉ
centamiḻ vallār
cīrmalintu aḻakuār celvam atuōṅkic
civaṉ aṭi
naṇṇuvar tāmē
Translation
Lord
Sivaṉ resides in a good city called Pampuram
surrounded by a big fortified wall and being eminent by its fame in this world.
If the devotees of him recites these verses which are sung by Gnasampantan in
Chenthamizh, who has knowledge of the four “Vedas” and who has abundant love
and there by eminent, has born in “Kountinya
Kottiram” in the ancient town of Kazhumalam (Seerkazhi) which has multi storey
buildings and beautiful fields in which the paddy Kar is abundantly produced
will definitely become great and attain fame and their wealth will
increase to add beauty to them and
finally they will attain the feet of the
Lord.
11
Note :Transliteration is done
as per “MADRAS TAMIL LEXICO N
TRANSLITERATION”
Appar Swamigal in his 22nd Devarap pathigam
mentions about Thiruppampuram. He sung as “Pampuramegathalanai” pathigam
(6485). Sundaramoorthy swamigal in his 12th Devarap pathigam
mentions about “Pampanipampuram” in Devaram (7355).
திருசிற்றம்பலம்
அருமையான தெளிவுரை
ReplyDelete